கூடங்குளத்தில் 25 ஆடுகள் கூண்டோடு மர்மச் சாவு: விவசாயி பெரும் கவலை

கூடங்குளம் அருகே சங்கநேரி கிராமத்தில் கொட்டகையில் இருந்த 25 செம்மறி ஆட்டு குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
நெல்லையில் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 25 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள சங்கநேரி கிராமத்தில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகை உள்ளது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பெருமாள் தனது ஆடுகளை பாதுகாப்பாக ஓலையால் செய்யபட்ட கூடுக்குள் அடைத்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென கொட்டகையில் இருந்த 25 செம்மறி ஆட்டு குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதை கண்டு பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். விஷ பூச்சிகள் எதும் கடித்ததால் ஆடிகள் உயிரிழந்ததா அல்லது மழையால் நோய் தாக்கி இறந்துள்ளதா என தெரியாமல் பெருமாள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu