திசையன்விளையில் இரும்பு கம்பியால் தாக்கி கூலி தொழிலாளி கொலை: இளைஞர் கைது
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இரும்பு கம்பியால் தாக்கி கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் குற்றவாளி கைது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவ்வலடியை சேர்ந்த ரமேஷ்(31) என்பவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். ரமேஷ் மற்றும் மணலிவிலியை சேர்ந்த முருகானந்தம்(21) இருவரும் ஒன்றாக கூலி வேலைக்கு சென்று வருவார்கள். வேலை இல்லாத நேரங்களில் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது வழக்கம். மேலும் இறந்து போன ரமேஷ் என்பவரை வயது வித்தியாசம் பார்க்காமல் முருகானந்தம் மரியாதையின்றி பேசி வந்துள்ளார். ரமேஷ்க்கு 26.10.2021 அன்று பிறந்தநாள் என்பதால் தனது தந்தையிடம் பணம் பெற்றுக் கொண்டு திசையன்விளை சென்றுள்ளார். அப்போது முருகானந்தத்தை சந்தித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு உள்ளவர்கள் ரமேஷின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். அப்போது அவரது தந்தை சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு செல்லும் போது முருகானந்தம் ரமேஷை அவதூறாக பேசி உனக்கு எதுக்கு மரியாதை கொடுக்கணும் என்று கூறி நீ உயிரோடு இருந்தால் தானே என்னிடம் பேசுவ எனக்கூறி இரும்பு பைப்பால் ரமேஷின் தலையில் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் அருகில் உள்ளவர்கள் ரமேஷை ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனை கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை சந்திரசேகர் திசையன்விளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் ஜமால் விசாரணை மேற்கொண்டு ரமேஷை கொலை செய்த முருகானந்தத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu