வள்ளியூர் அருகே விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் வர்ணம் தீட்டி விழிப்புணர்வு

வள்ளியூர் அருகே விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் வர்ணம் தீட்டி விழிப்புணர்வு
X

வள்ளியூர் பகுதிகளில் வேகத்தடை உள்ள இடங்களில் காவல் துறையினர் வர்ணம் பூசி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவனேரி அருகே விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடையை வர்ணம் தீட்டி விழிப்புணர்வு செய்த வள்ளியூர் காவல் துறையினர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோவனேரி அருகே உள்ள அணுகு சாலையில் வேகத்தடை உள்ளது. வேகத்தடை இருப்பதை அறியாமல் வாகன ஓட்டிகளால் அப்பகுதியில் விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீதுவிடம், வேகத்தடை இருப்பதை அறியாமல் விபத்து ஏற்படுகிறது என்று கோரிக்கை வைத்தனர். இதன்படி வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது,மற்றும் காவலர்கள் நம்பிராஜன்,சக்திவேல் ஆகியோர் சம்பவ இடம் சென்று வேகத்தடை இருப்பது அனைவருக்கும் தெரியும் வண்ணம் சாலையில் வர்ணம் பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் வள்ளியூர் பகுதிகளில் வேகத்தடை இருப்பதை தெரியும் வண்ணம் வேகத்தடை உள்ள இடங்களில் காவல் துறையினர் வர்ணம் பூசி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இச்செயலை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!