மூதாட்டியை தோளில் தூக்கி சென்று வாக்களிக்க உதவிய உதவி ஆய்வாளர்: பொதுமக்கள் பாராட்டு

வாக்களிக்க வந்த மூதாட்டியை தனது தோளில் தூக்கி சென்று ஓட்டளிக்க உதவிய உதவி ஆய்வாளர் பொதுமக்கள் பாராட்டு.

வாக்குச்சாவடிக்கு ஓட்டளிக்க வந்த மூதாட்டியை மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் தனது தோளில் தூக்கி சென்றார்.

நெல்லை மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 4 ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி வள்ளியூர் யூனியன் சங்கனாபுரம் வாக்குச்சாவடியில் இன்று காலை தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்த மூதாட்டி நடந்து வருவதற்கு மிகவும் சிரமப்பட்டது பார்த்த மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சையத் நிஸார் திடீரென தனது தோளில் மூதாட்டியை தூக்கிச் சென்று வாக்களிக்க உதவி செய்தார். இதனை அங்கு வாக்களிக்க வந்த பொதுமக்கள் பார்த்து அந்த காவலரே வெகுவாக பாராட்டினார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!