களக்காடு பத்மனேரியில் வேளாண் தாெழில் நுட்ப கலை நிகழ்ச்சி

களக்காடு பத்மனேரியில் வேளாண் தாெழில் நுட்ப கலை நிகழ்ச்சி
X
நெல்லை மாவட்டம், களக்காடு பத்மனேரி கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்பம் குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

களக்காடு அருகே உள்ள பத்மனேரி கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மை தொழில் நுட்பம் குறித்த கலைப்பயணம் கலாஜாதா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு களக்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தி தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர் அஞ்சனாதேவி முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

பத்மனேரி பஞ்சாயத்து தலைவி அருள் செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கவுரவித்தார். திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளை உறுப்பினர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளான பாடல், நாடகம் மற்றும் நடனம் போன்றவை மூலம் விவசாய தொழில்நுட்பங்கள், உயிர் உர விதை நேர்த்தி நன்மை தரும் பூச்சிகள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம் நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி ஆகியன பற்றியும் விவசாய திட்டங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரிசூலம் விவசாயிகளின் பார்வைக்கு வேளாண் கருத்து காட்சியினை ஏற்பாடு செய்திருந்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்த கொண்டு கருத்து காட்சியை கண்டு பயன்பெற்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil