திசையன்விளையில் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
மாணவி ரம்யா.
திசையன்விளை அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் திட்டியதாக மனமுடைந்து மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை. திசையன்விளை போலீஸ் விசாரணை.
நெல்லை மாவட்டம் திசையன்விளை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மாணவி ரம்யா (வயது 14). இவர் திசையன்விளை உடன்குடி ரோட்டில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா தபோவனம் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவியை தேர்வு எழுதும்போது அறையின் பொறுப்பு ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் மாணவர்கள் மத்தியில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி, மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியர் திட்டியதால் தான் அவமானப்பட்டதை தனது தாயிடம் சொல்லி அழுது "இனிமேல் பள்ளிக்கு போகமாட்டேன்" என கூறியதாக தெரிகிறது. மாணவியின் தாய் கலா மாணவியை சமாதானப்படுத்தியதாகவும் தெரிகிறது. மாணவியின் தந்தை வேலைக்கு சென்றுள்ளார். மாணவியின் அண்ணன் டியூசன் சென்றுள்ளார். மாணவியின் தாய் பக்கத்து வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனம் உடைந்த மாணவி தனி அறையில் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் அண்ணன் சங்கர் டியூசன் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது தனது தங்கை ரம்யா மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறி அழுதுள்ளார். தனது தாயிடம் தங்கை இறந்த விபரத்தை கூறியுள்ளார். 14 வயது பள்ளி மாணவி ரம்யா ஆசிரியர் திட்டியதால் இறந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அப்பகுதியை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மாணவி இறந்த சம்பவம் குறித்து திசையன்விளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu