குமரியை சேர்ந்த 39 மீனவர்கள், 7 படகு சிறை பிடிப்பு: இடிந்தகரையில் பரபரப்பு

குமரியை சேர்ந்த 39 மீனவர்கள், 7 படகு சிறை பிடிப்பு: இடிந்தகரையில் பரபரப்பு
X

இடிந்தகரை மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள்.

இடிந்தகரையை சேர்ந்த மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 படகு மற்றும் 39 மீனவர்களை சிறை பிடித்ததால் பரபரப்பு.

நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 படகு மற்றும் 39 மீனவர்களை இடிந்தகரையில் சிறைபிடித்ததால் ஏற்பட்டதால் பரபரப்பு.

நெல்லை மாவட்டத்தில் 10 கடற்கரை கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் பெரும்பாலும் நாட்டுப் படகுகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இடிந்தகரையில் 250க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதனிடையே கடந்த வாரத்தில் இடிந்தகரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 3 முதல் 5 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடிப்பதற்காக வலைகளை விரித்து இருந்தபோது, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தூண்டில் வலைகள் மூலம் மீன் பிடித்து வலைகளை அறுத்ததாக தெரிகிறது.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம், பள்ளம், மேலமணக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை இடிந்தகரையை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை 5 நாட்டிக்கல் தொலைவில் சுற்றிவளைத்து சிறை பிடித்து இடிந்தகரை கொண்டு வந்தனர். இதில் 7 படகுகள் மற்றும் 39 மீனவர்களை சிறைபிடித்து இதுவரையில் வைத்துள்ளனர். தகவலறிந்த கூடன்குளம் கடலோர காவல் படையினர் மற்றும் கூடங்குளம் காவல் துறையினர் ராதாபுரம் மீன்வளத் துறையினர் இடிந்தகரை மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில்:- நடந்த பிரச்சினைக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தெரிவித்தனர். இடிந்தகரை மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களால் எங்களுக்கு 10 லட்சம் வரை சேதமாகி உள்ளது. அவர்கள் எங்களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை அவர்களை விடுவிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story