சென்னைக்கு 1 லட்சம் பனை விதை: காெடுத்த வாக்கை நிறைவேற்றிய சபாநாயகர்
ராதாபுரத்திலிருந்து சென்னைக்கு ஒரு லட்சம் பனை விதைகளை சபாநாயகர் அப்பாவு அனுப்பி வைத்தார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் இருந்து சென்னைக்கு ஒரு லட்சம் பனை விதைகளை சட்டமன்றத்தில் உறுதியளித்தன்படி சபாநாயகர் அப்பாவு கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
தமிழக அரசு பனைமரம் பெருக்கு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 30 மாவட்டங்களில் எழுபத்தி ஆறு லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனை கன்றுகளையும் முழு மானியத்தொகையுடன் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையின் போது அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அப்போது சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு ஆண்டுதோறும் ஒரு லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் வேளாண்துறையிடம் ஒப்படைப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து அவரது சொந்த ஊரான லெப்பை குடியிருப்பில் தயாரான ஒரு லட்சம் பனை விதைகள் முதற்கட்டமாக லாரி மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டன.
இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவும் கூறியதாவது:- தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும், வளத்தோடும், ஒன்றுபட்டு, மழை ஈர்ப்பு மையம், நீர்நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனைமரங்கள் அழிந்து வருவதாகவும், அதனை காப்பாற்ற ஏரிக் கரைகளிலும், சாலை ஓரங்களிலும் பனை மரங்களை வளர்ப்பதற்கு பனைமர பெருக்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் மதிப்புக்கூட்டு பொருள்களை பனை வாரியமும், வேளாண் கூட்டுறவு சங்கங்களும் ஒருங்கிணைந்து நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu