வள்ளியூரில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு கொரோனாபரிசோதனை-காவல்துறைஅதிரடி

வள்ளியூரில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு கொரோனாபரிசோதனை-காவல்துறைஅதிரடி
X

வள்ளியூரில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு கொரோனாபரிசோதனை.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஊரடங்கு விதிமுறைகள் மீறியவர்களை காவல்துறையினர் கொரானா பரிசோதனைக்கு ஈடுபடுத்தினர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஊரடங்கு விதிமுறைகள் மீறியவர்களை காவல்துறையினர் கொரானா பரிசோதனைக்கு ஈடுபடுத்தினர்.

தமிழகம் முழுவதும் கொரானா 2 அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

விதிமுறை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் போலீசார் சாலையை மறித்து தடுப்புகள் வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு கட்டுபாடுகளை கடுமையாக அமல்படுத்தும் நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஏ.எஸ்.பி சாய் சிங் மீனா உத்தரவின் பேரில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் போலீசார் 10 மணிக்கு மேல் இன்று தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து கொரானா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.


கொரானா பரிசோதனை முகாமினை இராதாபுரம் தாசில்தார் கனகராஜ் மற்றும் வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கோலப்பன் தலைமையிலான குழுவினரும் வள்ளியூர் பேரூராட்சி சுகாதாரத்துறை அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டனர். நிகழ்வில் வள்ளியூர் அரசு மருத்துவனை சித்த மருத்துவர் ஆயிஷா பேகம் பொதுமக்களுக்கு கபசுர வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!