வள்ளியூரில் வாழ்வாதாரம் கோரி சபாநாயகரிடம் மனு கொடுத்த திருநங்கைகள்.

வள்ளியூரில் வாழ்வாதாரம் கோரி சபாநாயகரிடம் மனு கொடுத்த திருநங்கைகள்.
X

சபாநயகரிடம் மனு அளித்த திருநங்கைகள்.

வாழ தான் வழியில்லை - வாழ்வாதாரமாவது தாருங்கள்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வசிக்கும் திருநங்கைகள் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவுவிடம கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக வள்ளியூரில் இருக்கும் திருநங்கைகள் அனைவரும் தங்களுடைய கோரிக்கை மனு கொடுத்து வந்தோம்.

ஆனால் எந்த முயற்சியும் யாரும் எங்களுக்கு எடுக்கவில்லை. நாங்கள் வள்ளியூரில் சுமார் 22 திருநங்கைகள் வசித்து வருகின்றோம். சுமார் ஏழு வருடங்களாக வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறோம்.

எங்களுக்கு எந்த வித சலுகைகளும் கிடைக்கவில்லை வீட்டு வீட்டு மனை பட்டா, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் திருநங்கை அடையாள அட்டை போன்ற எதுவும் எங்கள் கையில் இல்லாமல் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம் எங்களுக்கு வாழ்வாதாரம் வழங்க வேண்டுமென குறிப்பிடப் பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்