நெல்லை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் எஸ்டிபிஐ கட்சி போட்டி

நெல்லை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் எஸ்டிபிஐ கட்சி போட்டி
X

மேலப்பாளையத்தில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் 

நெல்லை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் ஹயாத் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்த மாவட்ட செயற்குழுவில் வரும் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவது, நெல்லை மாநகர் பகுதிகளில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் புறக்கணிக்கபட்டுள்ள மேலப்பாளையம் வார்டுகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானகள் நிறைவேற்றபட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ்.எ‌.கனி, மாவட்ட செயலாளர்கள் பேட்டை முஸ்தபா, பர்கிட் அலாவுதீன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஆரிப் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேக் அப்துல்லாஹ், ஜவுளிகாதர், ரினோஷா ஆலிமா, பாளை சட்டமன்ற தொகுதி தலைவர் மின்னதுல்லாஹ், செயலாளர் பாளை சிந்தா, நெல்லை சட்டமன்ற தொகுதி தலைவர் இலியாஸ், செயலாளர் முகம்மது கௌஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா நன்றி உரை ஆற்றினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!