குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்: நோய் தாெற்று பரவும் அபாயம்

குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்: நோய் தாெற்று பரவும் அபாயம்
X

நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் ரயில் நகர் பகுதியில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் இன்றி கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை ரயில் நகர் குடியிருப்பு பகுதியில் கொட்டுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

பாளையங்கோட்டையில் அரசு மருத்துவமனை கழிவுகள் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அச்சம்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரயில் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் ரயில் நகர் பகுதியில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் இன்றி கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நெல்லை அரசு மருத்துவமனையில் பல்வேறு துறைகளின் கீழ் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் பயோ கழிவுகள் ஊழியர்கள் மூலம் கொண்டு வரப்பட்டு பிரசவ வார்டுக்கு பின்புறம் அமைந்துள்ள ரயில் நகர் பகுதியில் கொட்டப்படுகிறது.

குறிப்பாக நோயாளிகளுக்கு போடப்படும் ஊசிகள், காட்டன்கள் போன்ற கழிவுகள் இங்கு கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself