/* */

நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை

வீரவநல்லூர் அருகே கொலை நடந்த சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று விசாரணை

HIGHLIGHTS

நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை
X

வீரவநல்லூர் அருகே கொலை  சம்பவம் நடந்த இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழியில முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளியை சேர்ந்த கணபதி மகன் ஆறுமுகம்(40). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த மாசானத்துக்கும் சில நாட்களுக்கு முன்பு மாடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த முன் விரோதத்தில், நேற்று இரவு மாடு மேய்த்து விட்டு, வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை, ஊர் எல்லையில் மாசானமும் மற்றொருவரும் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அப்போது மாசானம், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் அதே இடத்தில் இறந்தார். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். வீரவநல்லூர் போலீசார் கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 28 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  காயங்களை ஆற்றிக்கொள்ள 'மறதி ஒரு மாமருந்து'..!
 2. லைஃப்ஸ்டைல்
  'அப்பா' எனும் ஆத்மாவை உணருங்கள்..! உங்கள் மூச்சாக இருப்பவர் அவரே..!
 3. ஆன்மீகம்
  நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
 4. லைஃப்ஸ்டைல்
  நல்ல நட்பு என்பது ஒரு நூலகம்..! நட்பின் வரிகள்..!
 5. வானிலை
  5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை..!
 6. க்ரைம்
  பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை
 7. உலகம்
  துபாயில் கனமழை : வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாகனங்கள்..!
 8. ஈரோடு
  ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரம்
 9. இந்தியா
  தேசிய கீதம் வெறும் வரிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது நம் தேசத்தின்...
 10. லைஃப்ஸ்டைல்
  Leukemia meaning in Tamil -இரத்தம், எலும்பு மஜ்ஜையை சிதைக்கும்...