சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு செயல்முறை விளக்கம்
சேரன்மகாதேவி வட்டாரத்தில் தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ முகாமின் கீழ், மண் புழு உரம் பற்றிய செயல்விளக்கம் நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டாரத்தில் தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ முகாமின் கீழ், மண் புழு உரம் பற்றிய செயல்விளக்கம் நடத்தினர்.
மண் புழு உரம் எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்தனர். இயற்கை விவசாயம் மற்றும் மாடித்தோட்டத்தில் மண் புழு உரத்தின் பயன்கள் இன்றியமையாதது என்று தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் அபிஜித்நாயர், அஜித்குமார், ஆனந்த்பாபு, அரவிந்த், இளங்கோவன், ஹரிசெல்வபிரசாத், முகமதுஅஸ்லாம், பிரசாந்த், ராஜேஷ், சிவஜெயஆகாஷ், விஸ்வநாத் ஆகியோர் விளக்கினர்.
மேலும் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகளை விவசாயிகள் அறிந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு மண் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu