அகஸ்தியர்- மணிமுத்தாறு அருவிக்கு செல்ல பிப் 2-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி

அகஸ்தியர்- மணிமுத்தாறு அருவிக்கு  செல்ல பிப் 2-ஆம் தேதி முதல்  பொதுமக்களுக்கு அனுமதி
X

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் விழும் அருவி

மாஞ்சோலை எஸ்டேட், சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு வனத்துறையினர் அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிக்கு 2-ஆம் தேதி முதல் செல்ல அனுமதி வனத்துறையினர் தகவல்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு கடந்த 26 ஆம் தேதியில் இருந்து வருகிற 6 ஆம் தேதி வரையிலும், புலிகள் கணக்கெடுப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில், புலிகள் கணக்கெடுப்பு பணி வருகிற 1-ம் தேதியுடன் நிறைவு பெறுவதாகவும், 2ஆம் தேதி முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil