திருச்சி காவிரி ஆற்றில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நூதன போராட்டம்

திருச்சி காவிரி ஆற்றில்  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து  விவசாயிகள் நூதன போராட்டம்
X
திருச்சி காவிரி ஆற்றில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

திருச்சி : டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் காவிரி ஆற்றில் நூதன போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். காவிரி ஆற்றின் நடுவே குழிதோண்டி கழுத்து வரை மணலில் உடலைப் புதைத்து கொண்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து வந்த திருச்சி கோட்டை போலீசார் பேச்சு வாரத்தை நடத்தினர். அப்போது போராட்டத்தை கைவிட்டு செல்லும் படி போலீசாரால் வலியுறுத்தப்பட்டது. இதனை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இந்த நிலையில் போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!