திருச்சியில் டாஸ்மாக் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சியில் டாஸ்மாக் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு இ.எஸ்.ஐ.மருத்துவ வசதி வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி பணி நேரத்தை ஏற்கனவே இருந்தது போல பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி அமைக்க வேண்டும்., ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்,கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!