திருச்சியில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் சிறையில் அடைப்பு

திருச்சியில் புகையிலை பொருட்கள் கடத்தலில் கைது செய்யப்பட்ட இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி கோட்டை போலீசார் இன்று காலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி அதில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் சம்பந்தமாக கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த சோமு சேகர் (வயது22), மனோஜ் குமார் (வயது 26) இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!