காந்தி ஜெயந்தி: மரக்கன்று வழங்கிய மக்கள் சக்தி இயக்கம்

காந்தி ஜெயந்தி:  மரக்கன்று வழங்கிய மக்கள் சக்தி இயக்கம்
X

காந்தி சிலைக்கு கதர் ஆடை போர்த்தி மரியாதை செலுத்தினர்

காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரக்கன்றுகள் வழங்கினர்

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் காந்தி ஜெயந்தி ஜெயந்தி நிகழ்ச்சியை இன்று காலை 10.00 மணியளவில் பொன்மலையில் கொண்டாடினர் . இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ தலைமை தாங்கினார்.

இதில் மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், கலைக்காவிரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும், தண்ணீர் அமைப்பு செயலாளருமான தி. சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொன் மலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலைக்கு பதிலாக "கதர் ஆடைகளை உடுத்துவோம்: நெசவாளர்களை உயர்த்துவோம் " என்ற நோக்கத்தில் கதர் ஆடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

காந்தி பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இயற்கையை பாதுகாக்க வேண்டி அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது . மேலும் உன்னதமான தமிழகம் காண , முழுமையான மது விலக்கை ஆதரீப்பீர் , என விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.

நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்க மாநகர நிர்வாகி விஜயகுமார் , மகளிர் அணி கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன் , லலிதா, நரேஷ்குமார் , வெங்கடேஷ், தயானந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!