திருச்சி பெல் எம்.எச்.டி மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் மத்திய அமைச்சருக்கு எம்.பி, சிவா கடிதம்
எம்.பி. திருச்சி சிவா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விடுவிப்பதற்கும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிருக்கு போராடுவதை உங்களது கவனத்திற்கும் கொண்டு வருகிறேன்.
இதற்கு உடனடி தேவையான நடவடிக்கைகளுக்கும், பின்வரும் தகவல்களை தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். எனது சொந்த ஊரான திருச்சியில் அமைந்துள்ள பிஹெச்எல் யூனிட்டில் உள்ள எம்.எச்.டி மையம் மூன்று ஆக்ஸிஜன் ஆலைகளைக் கொண்டுள்ளது,
ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கு 140 மெட்ரிக் கியூப் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்டது, ஆனால் அவை 2003ம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் இங்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
பின்வரும் பராமரிப்பு நடைமுறைகள் செய்யப்பட்டால் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்.
1) கம்ப்ரசர் ஓவராயிலிங்.
2) காற்று பிரிக்கும் அலகு, காப்பேர் வெஸல்ஸ் ட்ரீட்டிங் ப்ராசஸ்.
3) ஃப்ரீயான்ஸ் அலகு சர்வீஸ்.
4) குளிரூட்டும் நீர் பம்ப் சர்வீஸ்.
5) ஸ்டோரேஜ் வெஸல்ஸ் புரோவிஷன்ஸ்.
6) அனைத்து வால்வுகள் பராமரிப்பு.
இந்த அலகுகளில் முன்னர் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 நாட்களுக்குள் அலகுகள் செயல்பாட்டுக்கு வருவதையும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனும் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.
இந்த ஆலோசனையை நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வீர்கள், தேவையானதை விரைவாகச் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு எம்.பி. சிவா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu