75வது சுதந்திரதின ஓட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

75வது சுதந்திரதின ஓட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
X

சுதந்திரதின ஓட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார் 

நாட்டின் 75-வது சுதந்திரதின ஓட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 744 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித் திட்டம், மாநில விளையாட்டு ஆணையத்தின் மூலமாக சுதந்திர தின ஓட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதியான இன்று வரை நடத்தி வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் இன்று இந்த சுதந்திர தின ஓட்டம், நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியோருடன் இணைந்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக் உட்பட்டு நடத்தியது.

ஆரோக்கியமான, தன்னம்பிக்கை உள்ள சமூகத்தை உருவாக்க, அனைவரும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கு என நேரம் ஒதுக்கிட தங்கள் வாழ்வில் தீர்மானம் மேற்கொள்ளலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக நடைபெற ற இந்த ஓட்டத்தை, இன்று காலை 7.00 மணி அளவில் திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பழைய தபால் நிலையத்திற்கு முன்பு அமைந்து இருக்கும் உப்புசத்தியாகிரக நினைவு தூணிற்கு முன்பு இருந்து, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.இந்நிகழ்சியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், பாரதிதாசன் பல்கலைகழக துணை வேந்தர் முனைவர்.செல்வம், பல்கலைகழக பதிவாளர் முனைவர் கோபிநாத், நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்ச்சி அலுவலர் முனைவர் லட்சுமிபிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சுதந்திர தின ஓட்டம் ரயில்வே ஜங்சன் ரவுண்டான, ரயில்வே மேம்பாலம், மன்னார்புரம் ரவுண்டான, கலெக்டர் முகாம் அலுவலக சாலை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் சுருதி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!