மெய்வழிச்சாலை அமைப்பை அவதூறாக பேசிய சாமியார் திருச்சி சிறையில் அடைப்பு

மெய்வழிச்சாலை அமைப்பை அவதூறாக பேசிய சாமியார் திருச்சி சிறையில் அடைப்பு
X

சாமியார் சிவகுமாரை போலீசார் திருச்சி கோர்ட்டில் இருந்து சிறைக்கு அழைத்து சென்றனர்.

மெய்வழிச்சாலை அமைப்பை அவதூறாக பேசிய சென்னை சாமியார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை புத்தகரத்தில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்த வருபவர் சாமியார் சிவயோகி என்கிற சிவகுமார். இவர் திருச்சி அருகே உள்ள மெய்வழிச்சாலை என்ற அமைப்பை சார்ந்தவர்களின் மத வழிபாட்டு முறைகள் குறித்து அவதூறாக பேசி விமர்சித்தது தொடர்பாக அவர் மீது கடந்த ஜூலை மாதம் திருச்சி புத்தூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார்.

இது தொடர்பாக சாமியார் சிவகுமார் மீது திருச்சி உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சாமியார் சிவகுமாரை இன்று திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 4-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வரும் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சாமியார் சிவகுமார் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story