திருச்சி: டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக கலெக்டர் சிவராசு ஆலோசனை

திருச்சி: டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக கலெக்டர் சிவராசு ஆலோசனை
X

டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் பற்றி திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கலெக்டர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தொற்று நோய் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் டெங்கு காய்ச்சல் தலைகாட்ட தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொசுவினால் பரவும் இந்த டெங்கு காய்ச்சலை வரவிடாமல் தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி, கி. ஆ‌ பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா, துணை இயக்குனர் சுப்ரமணி ,மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்கா தரணி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் காளியப்பன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆட்சியர் சிவராசு ஆலோசனைகள் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!