கொரோனா தடுப்பூசி- திருச்சி மாநகராட்சிக்கு சமூக ஆர்வலர் வேண்டுகோள்

கொரோனா தடுப்பூசி- திருச்சி மாநகராட்சிக்கு சமூக ஆர்வலர் வேண்டுகோள்
ஜான் ராஜ்குமார்
கொரேொனா தடுப்பூசி தொடர்பாக திருச்சி மாநகராட்சிக்கு சமூக ஆர்வலர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி மாபெரும் முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க தடுப்பூசி செலுத்தாதவர்களின் வீடுகளில் துப்புரவு பணியாளர்கள் குப்பை எடுத்து செல்ல மறுப்பதாக திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரும் சுவாதீன திருச்சபை பேராயருமான ஜான் ராஜ்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ளவேண்டும் என கூறி உள்ளார். இதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் வீட்டில் குப்பை அள்ளக்கூடாது என அரசு
கூறவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் குப்பை எடுப்பதற்கு நிபந்தனை விதிப்பது சரி அல்ல. இதுபற்றி மாநகராட்சி ஆணையர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags

Next Story