திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை விவசாயிகள் போலீஸ் தள்ளு முள்ளு

திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை விவசாயிகள் போலீஸ் தள்ளு முள்ளு
X
உரம் விலையை திரும்ப பெற வலியுறுத்திவிவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர் - போலீசாருக்கும் போரட்டாரருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு150க்கு மேற்பட்டோர்முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது மத்திய அரசு உயர்த்தியுள்ள 58% உரம் விலையை கண்டித்தும், நெல்லுக்கு உரிய விலைமை வழங்க வலியுறுத்தியும், கோஷமிட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் காவல்துறை உதவி ஆணையர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து முற்றுகையில் ஈடுப்படவே போலீசாருக்கும் போராட்டகாரருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் பவன்குமார்ரெட்டி விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருமாறு பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்