அரை நிர்வாணப் போராட்டம்- விவசாயிகள் கைது

அரை நிர்வாணப் போராட்டம்- விவசாயிகள் கைது
X

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் அலுவலகத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 100−வது நாளாக டில்லியில் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். மேலும் மனித எலும்புகளை பிரதமருக்கு அனுப்பி வைக்கப் போவதாக தெரிவித்தனர்.

மேல்சட்டை இல்லாமல் அரை நிர்வாணமாக அமர்ந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பிஎஸ்என்எல் அலுவலகம் மூடப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!