சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவை தரும்-பாரிவேந்தர்

சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவை தரும்-பாரிவேந்தர்
X

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவையும், நல்ல மாற்றத்தையும் தரும் என பெரம்பலூர் தொகுதி எம்.பி., பாரிவேந்தர் கூறினார்.

பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் மற்றும் பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைவர் சத்தியநாதன் , இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்க்கவகுல முன்னேற்ற சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பாரிவேந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ,பயிர்கடன் தள்ளுபடி குறித்து, தூண்டியும் செய்யாமல் இருப்பது தவறு. இதை தூண்டிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. தூண்டப்பட்ட பிறகு செய்யாமல் இருந்தால் அது அதை விட தவறு, அதை ஸ்டாலின் செய்து இருக்கிறார். அதற்காக நன்றி. இந்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவை தரும், நல்ல மாற்றத்தை தரும். அரசியல் மாற்றம் நடந்தே தீரும். நல்ல பல திட்டங்களை கொடுக்கும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!