திருச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

 உபி சம்பவத்தை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உபி சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தரபிரதேசத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார்களை ஏற்றியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் 8 விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார். இதில், ஜனநாயக சமூக நீதி கூட்டமைப்பு தலைவர் சம்சுதீன், மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலாளர் ஜீவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில விவசாய சங்க துணை செயலாளர் இந்திரஜித், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சுரேஷ், சமூக நீதிப் பேரவை மாவட்ட செயலாளர் ரவிக்குமார், தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ரெங்கராஜன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படுகொலை சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் கோஷங்களாக எழுப்பப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!