விலை கடும் உயர்வு: திருச்சி மாவட்டத்தில் மீன் விற்பனை மந்தம்!

விலை கடும் உயர்வு: திருச்சி மாவட்டத்தில் மீன் விற்பனை மந்தம்!
X

திருச்சி பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ள மீன் மார்க்கெட்.

மீன்பிடி தடைக்காலம் என்பதால் திருச்சியில் மீன் விலை உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இன்று முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

காய்கறி, மீன் மற்றும் இறைச்சி சந்தைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் கடைபிடிக்காமல் அதிகளவில் கூடுவதால் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மீன் மார்க்கெட் இயங்கும் எனவும், அங்கு மொத்த வியாபாரம் மட்டும் அனுமதி அளித்து நேற்று மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மொத்த மீன் மார்க்கெட் காலை ௪ மணி முதல் செயல்பட தொடங்கி 8 மணிக்கு நிறைவடைந்தது. குழுமணி ரோட்டில் இயங்கி வந்த காசி விளாங்கி சந்தையின் 22 மொத்த வியாபார கடைகளும் இங்கு மாற்றப்பட்டுள்ளன.

இங்கு சில்லரை விற்பனை இல்லாததால் இங்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. முழு ஊரடங்கு காரணமாக கடந்த15 நாட்களாக செயல்படாமல் இருந்த மீன் சந்தை இன்று முதல் செயல்பட தொடங்கியதால் மீன் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் காலை 4 மணிக்கு தொடங்கிய மீன் சந்தை 8 மணிக்கெல்லாம் முடிவு பெற்றது.

இதுகுறித்து கூறிய மீன் வியாபாரிகள், தற்போது கடலில் மீன்பிடி தடைகாலம் ஏற்பட்டுள்ளதால்கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து மீன் விற்பனைக்கு வந்துள்ளது. கடல் மீன் வரத்து குறைந்தது. இதன் காரணமாக மீன்களின் விலை சற்று அதிகமாக காணப்பட்டது. இன்று மீன் சந்தையில் ஜிலேபி, சுறா, கிழங்கா, கட்லா மீன்களும் மற்றும் இராட்டு, நண்டு ஆகியவை விற்பனைக்கு வந்தது என தெரிவித்தார்.

மத்திய பேருந்து நிலையத்தில் மீன் சந்தை போடப்பட்டிருப்பதால் இருப்பதால் கழிவு நீர் செல்வதற்கு சாக்கடை வசதி இல்லாததாலும், இங்கு முழுவதும் துர்நாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!