திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாளை முதல் மீன் மார்க்கெட்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாளை முதல் மீன் மார்க்கெட்
X

திருச்சி மீன் மார்க்கெட் (பைல் படம்)

திருச்சி மத்திய பேருந்துநிலையம் நாளை முதல் மொத்த வியாபார மீன் மார்க்கெட்டாக செயல்படுகிறது.

தமிழ்நாடு அரசு கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு மாநிலம் முழுமையும் எவ்வித தளர்வுகளுமின்றி 24.05.2021 முதல் 31.05.2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது .

மேலும் தற்போது 14.06.2021 காலை 6 மணி வரை மேற்படி முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது . திருச்சி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது . திருச்சி மாநகர பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மீன் சந்தைகளில் மீன் விற்பனை செய்வதற்கு அனுமதியில்லை.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் மொத்த விற்பனை செய்யும் மீன்கடைகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது . இங்கு மீன் வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. சில்லரை விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவுதலை தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு திருச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!