டாஸ்மாக்: குறைந்தது நேரம் - குவிந்தது கூட்டம்..!

டாஸ்மாக்: குறைந்தது நேரம் - குவிந்தது கூட்டம்..!
X
சமூக இடைவெளியை மறந்த மது பிரியர்கள்.

கடைசிநேரத்தில் மது பாட்டில்களை வாங்க குவிந்த மது பிரியர்கள்

தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய கட்டுப்பாட்டின் கீழ் தேநீர், காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளில் காலை 8 மணி முதலே மது குடிப்போரின் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

குறிப்பாக மதியம் 12 மணிக்கு கடைகள் மூடப்படும் என்பதால் 11.45 மணி முதல் 12 மணி வரை மதுவை வாங்கி விட வேண்டும் என்பதற்காக மது குடிப்போர் கூட்டமாக நிற்பதையும் வேகமாக ஓடிவந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மதுக் கடைகளில் 12 மணிக்கு கடைகள் மூடப்படுவதால் கடைசி நேரத்தில் மது பாட்டில்கள் வாங்க மது பிரியர்கள் குவிந்தனர். ஆனால் கடை ஊழியர்கள் சரியாக 12 மணிக்கெல்லாம் மதுக்கடைகளை மூடிவிட்டு சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!