திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
X

சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கணேசன்

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உடல்நலக்குறைவால் திடீர் என இறந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள கோவண்டா குறிச்சியை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). இவர் திருச்சி மாநகர காவல் துறை பாலக்கரை போலீஸ் நிலையத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

திருச்சி மாநகரில் உள்ள கண்டோன்மென்ட், எடமலைப்பட்டிபுதூர், உறையூர், கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே சிறப்பாக பணியாற்றிய இவர் கடந்த 2 வருடங்களாக திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.‌

கடந்த சில வருடங்களாக இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயல் இழந்ததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் டயாலிசஸ் சிகிச்சை பெற்று வந்த கணேசன் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி திடீரென இறந்து விட்டார்.‌

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!