திருச்சி சரக டி.ஐ.ஜி.ஆக சரவண சுந்தர் பொறுப்பேற்பு

திருச்சி சரக டி.ஐ.ஜி.ஆக  சரவண சுந்தர் பொறுப்பேற்பு
X
திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர்
திருச்சி சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் ஐ.பி.எஸ். இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருச்சி சரக டி ஐ ஜி யாக ஏற்கனவே பணியாற்றி வந்த ஏ.ராதிகா சென்னை ஐ.ஜி. அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏ.சரவண சுந்தர் ஐ.பி.எஸ். திருச்சி சரக புதிய டி.ஐ.ஜி ஆக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆக ஏ.சரவண சுந்தர் ஐ.பி.எஸ். இன்று திருச்சி சரக டி ஐ ஜி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!