தமிழகத்தில் இன்று மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு தொடங்கியது
திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் நீட் தேர்வு எழுதுவதற்காக மாணவிகள் நீண்ட வரிசையில் நின்றனர்.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு இன்று இந்தியா முழுவதும் 3, 862 நகரங்களில் நடைபெறுகிறது.. இந்த தேர்வினை 16 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவதற்காக 1.10 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் மாணவிகள் 70 ஆயிரம் பேர், மாணவர்கள் 40 ஆயிரம் பேர் ஆவர்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவதற்காக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, காஞ்சிபுரம் ,கரூர், சேலம், நாமக்கல், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், வேலூர், தஞ்சாவூர்,திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 224 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் நீட் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, கிருமி நாசினி தெளித்து கைகளை சுத்தப்படுத்திய பின்னர் தேர்வு மையத்திற்குள் முககவசத்துடன் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் இரண்டு மணிக்கு தேர்வு தொடங்கியது.
இந்திய மேலும் மருத்துவ கல்வி வாரியத்தின் விதிமுறைப்படி கடுமையான சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu