திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டு கைதிகள் தற்கொலை முயற்சி

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டு கைதிகள் தற்கொலை முயற்சி
X
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டு கைதிகள் தங்களை விடுதலை செய்யக்கோரி தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை, வங்க தேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பொய் வழக்கில் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும். தண்டனைக் காலம் முடிந்து, வழக்குகளில் விடுதலை பெற்ற பிறகும், சிறப்பு முகாம் சிறையில் அடைத்து வைத்து உள்ளவர்களை விடுவிக்க வேண்டும். சிறப்பு முகாமில் உள்ளவர்களை, குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும், எனக் கோரி, சிறப்பு முகாமில் உள்ளவர்கள், கடந்த மாதம், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நேற்று சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்டவர்கள், அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை தின்று, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களில், டிக்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், ரமணன் என்பர் வயிற்று பகுதியை அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

துாக்க மாத்திரைகளை தின்றவர்களுக்கும், உடலை, அறுத்துக் கொண்டவர்களுக்கும், மத்திய சிறை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் அதிகாரிகள் முகாம் சிறைக்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....