திருச்சி கிழக்கு தொகுதியில் 'குட்டி' ஜெயலலிதா பிரச்சாரம்

திருச்சி கிழக்கு தொகுதியில்   குட்டி ஜெயலலிதா பிரச்சாரம்
X
ஜெயலலிதா தோற்றத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வெல்லமண்டி நடராஜன் பேத்தி அசத்தல்

திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெயலலிதா தோற்றத்துடன் பிரச்சாரம் செய்து வெல்லமண்டி நடராஜனின் பேத்தி அசத்தினார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர், மாநகர் மாவட்டச் செயலருமான அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் 18-வது வார்டு பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஜெயலலிதாவை போல தோற்றத்துடன் இருந்த சிறுமி ஒருவரும் வெல்லமண்டி நடராஜனுடன் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.

மைக்கை பிடித்த அந்த குட்டி ஜெயலலிதா… மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று ஜெயலலிதா பாணியில் பேச தொடங்கி….. அதிமுக இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க…. என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் யார்? என்று தொிந்து கொள்வதில் வாக்களர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. குட்டி ஜெயலலிதாவாக மாறி அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் "குட்டீஸ்" வேறு யாரும் அல்ல. வெல்லமண்டி நடராஜனின் பேத்தியும், வெல்லமண்டி ஜவகர் மகளுமான சாய் மித்ரா.

தாத்தா வெல்லமண்டி நடராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு வந்துள்ள சாய் மித்ரா எந்த வித பயமுமின்றி படு கேசுவலாக பேசி அனைவரையும் அசத்தினார். குட்டி ஜெயலலிதாவிற்கு அதிமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த பிரச்சாரத்தில் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், பொருளாளர் மனோகர், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், பகுதி செயலாளர்கள் சுரேஷ், அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பிரச்சாரத்திற்கு வந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அப்பகுதியில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து வாக்கு சேகரிக்க சென்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!