விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்
X
வேளாண்சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் போராட்டத்தை முறியடிக்க டிராக்டர் பேரணியின் போது விவசாயிகள் மீதான தாக்குதலைக்கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டண ஆர்பாட்டம்.

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 62 நாட்களைக் கடந்து போராடி வருகின்றனர், இதனிடையே கடந்த 26ம்தேதி செங்கோட்டைநோக்கி டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களது பேரணியை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும், போராட்டத்தினை முறியடிக்கும் வகையில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலைக் கண்டித்தும் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெண்கள், சமூக அமைப்பினர் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு மத்திய அரசையும், விவசாயிகள்மீதான தாக்குதலைக் கண்டித்தும் கண்டன முழக்கமிட்டனர். விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவேண்டும் துண்டிக்கப்பட்டுள்ள இணையசேவையினை மீண்டும் தொடங்கவேண்டும் என்றும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்றும், நாளையும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!