திருச்சியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த சின்ன முத்தம் பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சரத்குமார்(வயது24). இவர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது அதே பகுதியில் வசித்து வந்த பள்ளி மாணவி ஒருவருடன் சரத்குமார் நெருங்கி பழகினார். நாளடைவில் இது காதலாக மாறியது. இதனை பயன்படுத்திக் கொண்ட சரத்குமார் மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தார்.
ஒரு கட்டத்தில் மாணவி தனது தவறை உணர்ந்து சரத்குமாருடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் அந்த மாணவியுடன் நெருக்கமாக இருந்தபோது வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த காட்சிகளை காட்டி இதனை வெளியிட்டு உனது மானத்தை வாங்கி விடுவேன் என மிரட்டினார்.
இதனால் அச்சம் அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறினார். இதனை தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சரத்குமாரை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu