யாரை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கவேண்டும்? வாக்காளர்களுக்கு ஓர் வேண்டுகோள்
வழக்கறிஞர் ப. ஹரிபாஸ்கர்.
தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்வரி 19ம் தேதி வாக்குப்பதிவு நாள் என்பதால் தேர்தலுக்கு இன்னும் சரியாக 7 நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்த தேர்தலில் மதிப்பிற்குரிய வாக்காள பெருமக்கள் யாருக்கு வாக்களித்தால் நாட்டிற்கு நல்லது என்பதனை கருத்தில் கொண்டு ஒரு விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்துள்ளார், திருச்சியை சேர்ந்த முன்னணி வழக்கறிஞர் ப. ஹரிபாஸ்கர்.
அவரது வேண்டுகோள் என்ன என்பதை பார்ப்போமா?
உள்ளாட்சித் தேர்தல் ஆனது வார்டுகளுக்கு உள்ள குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை தார்ச்சாலை மற்றும் வார்டுகளுக்கும் ஏற்படும் செய்து தருவதற்காக வார்டுகளுக்கு பொதுவான ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பது ஆகும்.
அந்த ஒரு நபர் யார் என்பதை தீர்மானிப்பதில் விழிப்புணர்வு தேவை நம்முடைய கடமையும் ஆகும்.
1) அரசியல் கட்சியின் பெயரினை மட்டும் வைத்து ஒருவரை தேர்வு செய்யக்கூடாது.
2) நாம் எளிதாக நமது வார்டில் உள்ள பிரச்சினையை சொல்லக்கூடிய அளவிற்கும்,அதை அவர் காது கொடுத்து கேட்க கூடியவராக இருக்கவேண்டும்.
3) தேர்ந்தெடுக்கப்படும் நபர் அடிக்கடி நாம் சரளமாக நம் கண்ணில் படுபவராக இருக்க வேண்டும்.
4) நமக்கு எப்பொழுதும் அவர் மேல் ஒரு மரியாதை உண்டு என்ற நபராக இருக்க வேண்டும். அவரைப் பார்த்தால் பயத்தில் மரியாதை கொடுக்கும் நபராக இருக்க கூடாது.
5) தேர்ந்தெடுக்கப்படும் நபர் நமக்கு நேரடியாகவோ அல்லது சொந்தம் நட்பு வட்டாரங்களில் நெருங்கிய பழக்கம் உடையவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் எளிமையாக நமது பிரச்சனையை சொல்ல இயலும்.
5) அராஜகம், மிரட்டல், அச்சுறுத்தல் கேலி, கிண்டல் போன்ற எந்தவித குற்றச்சாற்று இல்லாத எளிமையான நபராக இருக்க வேண்டும்.
7) மொத்தத்தில் வார்டில் உள்ள பிரச்சினையை சரிசெய்ய தோள்கொடுக்கும் நண்பர்கள் போல் இருக்க வேண்டும்.
ஆகையால் உள்ளாட்சித் தேர்தல் என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் போல் அல்ல. எந்தவித அரசியல் கட்சியின் பெயரை மட்டும் வைத்து வாக்களிக்காதீர்கள் அந்த நபரின் உண்மை தன்மையை அறிந்து வாக்களியுங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu