ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா குறித்து கலெக்டர் ஆலோசனை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா குறித்து கலெக்டர் ஆலோசனை
X

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் இன்று நடந்தது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் சிவராசு ஆலோசனை நடத்தினார்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா நாளை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு டிசம்பர் 14ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இதன் காரணமாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை
கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் சக்திவேல், முத்தரசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!