திருச்சியில் கஞ்சா கடத்திய 2 பேர் காருடன் கைது

திருச்சியில் கஞ்சா கடத்திய 2 பேர் காருடன் கைது
X

கைது செய்யப்பட்ட இருவர்.

திருச்சியில் கஞ்சா கடத்திய 2 பேர் காருடன் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மண்டல போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. பரத்சீனிவாஸ் தலைமையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினர்.

அந்த காரில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது .அதன் மதிப்பு 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனையொட்டி காரில் இருந்த ஆசை மற்றும் புவனேஷ் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சாவும் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!