திருச்சி: வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு

திருச்சி: வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு
X
திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இடங்கள் பற்றிய விவரத்தை கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தல்கள் குறித்தஅறிவிப்பினை 26.01.2022 அன்று வெளியிட்டுள்ளது. இதன்படி திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துவாக்குடி, துறையூர், இலால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தைப்பார். மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர், ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி நாளை (28.01.2022) முதல் 04.02.2022 வரை நடைபெறுகிறது (ஞாயிறு நீங்கலாக) வேட்புமனுத் தாக்கல்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோட்டத்தில்,1,2,3,4,5,6,7,12, ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்-1அவர்களிடமும், 13,14,15,17,18,19,20,21 ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல்அலுவலர்-2 அவர்களிடமும், ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் வேட்புமனுவினைத் தாக்கல் செய்யலாம்.

அரியமங்கலம் கோட்டத்தில். 16,30,31,32,33,34,49,50 ஆகிய 8வார்டுகளுக்கு உதவி தேர்தல்அலுவலர்-3அவர்களிடமும்,35,36,37,38,39,40,41,43 ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்-4 அவர்களிடமும், அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்யலாம்.

பொன்மலை கோட்டத்தில். 42, 44,45,46,47,48,51,52,53, ஆகிய 9வார்டுகளுக்கு உதவி தேர்தல்அலுவலர்-5 அவர்களிடமும்,58,59,60,61,62,63,64,65 ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்-6 அவர்களிடமும்,பொன்மலை கோட்ட அலுவலகத்தில் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்யலாம்.

கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில், 26,27,28,29,54,55,56,57 ஆகிய 8வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்-7 அவர்களிடமும், 8,9,10,11,22,23,24,25 ஆகிய 8 வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்-8 அவர்களிடமும்,கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்யலாம்.

மணப்பாறை, துவாக்குடி, துறையூர், இலால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகளில்உள்ள வார்டுகளுக்கு சம்மந்தப்பட்ட நகராட்சிகளின் அலுவலகத்தில் உள்ளஉதவி தேர்தல் அலுவலர்களிடம் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்யலாம்.பாலகிருஷ்ணம்பட்டி. கல்லக்குடி. காட்டுப்புத்தூர், கூத்தைப்பார்.மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுர்,ச.கண்ணனூர், சிறுகமணி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, உப்பிலியபுரம்ஆகிய 14 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு சம்மந்தப்பட்ட பேரூராட்சிஅலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவலர்களிடம் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்யலாம்.

வேட்புமனுக்கள்காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வேட்புமனுவினைத் தாக்கல் செய்பவர் மற்றும் முன்மொழிபவர் என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இரு வாகனங்களுக்கு மேல் அனுமதி இல்லை. தேர்தல் ஆணையத்தின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும்,

கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களையும், வேட்பாளர்கள் பின்பற்றிட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil