திருச்சி : சமையலர் பணிக்கான அறிவிப்பு ரத்து

திருச்சி : சமையலர் பணிக்கான அறிவிப்பு ரத்து
X

பைல் படம்.

விண்ணப்பங்களின் அடிப்படையில் நடைபெற்ற தேர்வுப்பணிகள் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.

திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்கள் ஆண்-25, பெண்-15 என மொத்தம் 40 சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கு 2020-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கான விண்ணப்பங்களின் அடிப்படையில் நடைபெற்ற தேர்வுப்பணிகள் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai tools for education