திருச்சி மாநகராட்சி சுயேட்சை வேட்பாளர் இஸ்லாமிய மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாநகராட்சி சுயேட்சை வேட்பாளர் இஸ்லாமிய மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
X

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேட்சை  வேட்பாளர்.

திருச்சி மாநகராட்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் இஸ்லாமிய மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பன்னிரண்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன், மேலசிந்தாமணி பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தென்னைமரம் சின்னத்திற்கு ஆதரவாளர்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதில் இன்று வெள்ளிக்கிழமை காயிதேமில்லத் காலணியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் பாலமுருகன் உடன் பஜார்மைதீன், ஆட்டோ முன்னாபையா, நாகூர் அம்ஜத் மற்றும் மஞ்சள் படையினர் பலர் உடனிருந்து ஆதரவு திரட்டினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!