திருச்சி விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகங்கள் அளித்து வரவேற்பு

திருச்சி விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகங்கள் அளித்து வரவேற்பு
X

திருச்சி விமான நிலையத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகங்கள் அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் புத்தகங்கள் கொடுத்து முதலமைச்சரை வரவேற்றார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ரகுபதி மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் ஆகியோரும் புத்தகம் கொடுத்து முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். வரவேற்பு முடிந்த பின்னர் முதலமைச்சர் கரூருக்கு புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!