திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம்  பறிமுதல்
X
திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இது தொடர்பாக 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று வந்தது. இதில் வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது வீட்டு உபயோக பொருளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ 1.92 கோடி ஆகும்.

இதுதொடர்பாக கடலூரைச் சேர்ந்த மாரிமுத்து வினோத் மற்றும் கள்ளக்குறிச்சி சேர்ந்த இப்ராகிம் சாகுல் ஆகிய இரு பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
உப்பு கருவாடும் ஊற வெச்ச சோறும்..உடலுக்கு நன்மைகளை அள்ளித்தரும் கருவாடு!