/* */

கீழே கிடந்த ரூ 1 லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த மெக்கானிக்

கீழே கிடந்த ரூ. 1 லட்சம் பணத்தை மெக்கானிக் போலீசில் ஒப்படைத்தார். இவரது செயல் பலராலும் பாராட்டப்பட்டது.

HIGHLIGHTS

கீழே கிடந்த ரூ 1 லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த மெக்கானிக்
X

கீழே கிடந்த ரூ ஒரு லட்சம் பணத்தை போலீசில் ஒப்படைத்த நபரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாராட்டினார்.

திருச்சி மாவட்டம் முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்தவர் வக்கீல் மனோ விஜயசங்கர் (வயது 34). திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மனோ விஜயசங்கர் தனது தாயாரை மணப்பாறைக்கு பஸ்சில் ஏற்றி விடுவதற்காக வந்தார்.

அப்போது தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் கீழே விழுந்தது தெரியாமல் மனோ விஜயசங்கர் சென்றுள்ளார். தற்செயலாக மணப்பாறை பஸ்சில் இருந்து இறங்கிய ஆலம்பட்டியைச் சேர்ந்தத டூவீலர் மெக்கானிக் அழகர்சாமி (வயது 31) என்பவர் அங்கு கவர் ஒன்று கீழே கிடந்ததைக் கண்டு அதனை எடுத்து பார்த்துள்ளார்.

அதில் ரூ.1 லட்சம் பணம் இருந்ததைக் கண்டார். உடனடியாக திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவில் அந்த பணத்தை ஓப்படைத்தார். அழகர்சாமியை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ மற்றும் போலீசார் பாராட்டினர். மேலும்

யாருடைய பணம் என விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது வக்கீல் மனோ விஜயசங்கர் தனது பணம் என கூறி அதற்கான தகவல்களை கூறியதையடுத்து அவரிடம் பணம் ஓப்படைக்கப்பட்டது.

Updated On: 15 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி