திருச்சிக்கு வந்த ரயிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சிக்கு வந்த ரயிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளனர்.

தஞ்சையில் இருந்து திருச்சிக்கு வந்த ரயிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் குழுவினர் நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டனர் .

அப்போது தஞ்சையில் இருந்து திருச்சிக்கு வந்த ஒரு ரயிலின் பெட்டியில் சோதனை நடத்திய போது 9½கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அதனை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன் மதிப்பு ரூ/ 36ஆயிரத்து 500 ஆகும். இதனை ரயிலில் கடத்தி வந்தது யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
ai based agriculture in india