திருச்சி: சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடு-கன்று குட்டி பறிமுதல்

திருச்சி: சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடு-கன்று குட்டி பறிமுதல்
X
திருச்சியில் சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடுகள்-கன்றுக்குட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரியலூரில் இருந்து மணப்பாறை சந்தைக்கு சரக்கு ஆட்டோவில் விற்பனைக்காக 3 மாடுகள் மற்றும் 3 கன்றுக் குட்டிகளை ஏற்றி சென்றனர். திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் பழைய பால்பண்ணை அருகே சரக்கு ஆட்டோவில் மாடுகளை கொண்டு செல்வதை கண்ட ஒருவர், காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சரக்கு ஆட்டோவில் 3 மாடுகள் மற்றும் 3 கன்றுக் குட்டிகளை அடைத்து வைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மாடுகளுடன் சரக்கு ஆட்டோவை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!