திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் நடத்த விவசாயிகள் சங்கத்தில் தீர்மானம்

திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் நடத்த விவசாயிகள் சங்கத்தில் தீர்மானம்
X

திருச்சி அண்ணாமலைநகர் மலர் சாலையில் நடைபெற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

திருச்சியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் நடத்தப்போவதாக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அண்ணாமலைநகர் மலர் சாலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு சென்று, வருகிற மார்ச் மாதத்தில் போராட்டம் நடத்துவது.

அதுவரை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தொடர் உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் தங்கமுத்து, சந்திரசேகர் உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!